பிறரை குறை சொல்லாதே.

Devotions

பிறரை குறை சொல்லாதே.

மறைந்த நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளிடம் ஒரு முறை தங்கள் பையனை கூட்டிக்கொண்டு ஒரு பெற்றோர் சென்றனர்.காந்தியடிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் பையன் நிறைய Sweet சாப்பிடுகிறான், அவனுக்கு நல்ல அறிவுரையைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். காந்தியடிகள் சரி ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்று அவர்களை அனுப்பிவிட்டார். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவரை சந்திக்க வந்தார்கள். அப்பொழுது காந்தியடிகள் அந்த சிறுவனை அருகில் அழைத்து “தம்பி இனிமேல் அதிகமாக இனிப்பு சாப்பிடாதே” என்று அறிவுரை கூறினார். வந்தவர்களுக்கோ ஒரே குழப்பம். இதை போன மாதமே கூறியிருக்கலாமேஎன்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். அதை புரிந்துக் கொண்டகாந்தியடிகள், “போன மாதமே நான் சொல்லியிருக்கலாம், ஆனால் நானும் அதிகமாக இனிப்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னாலேயே அந்தபழக்கத்தை விட முடியவில்லை என்ற போது, நான் எப்படி அந்த சிறுவனுக்கு அறிவுரை கூற முடியும்? எனக்கு தகுதியில்லையல்லவா ? அதனால் நான் இந்த ஒரு மாதத்தில் அந்த பழக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். இப்பொழுது என்னால் தைரியமாக அறிவுரை கூற முடிந்தது” என்றார். வேதத்தில் தேவனும் இதை தான் கூறுகின்றார். நம் கண்ணில் ஒருபெரிய உத்திரம் இருக்கும்போது நாம் எப்படி பிறர் கண்ணில் உள்ளதுரும்பை எடுக்க சொல்ல முடியும்? இந்த உலகத்தில் குறையில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது.ஆதலால், பிறரை குறை சொல்ல நமக்கு தகுதியே கிடையாது. தேவன்ஒருவருக்கே அந்த தகுதி உண்டு. ஆனால் தேவனோ, “என் பிரியமே உன்னில் பழுதொன்று மில்லை” என்றே கூறுகின்றார். ஆகவே பிறரிடம் நல்லவிஷயங்கள் கண்டு அவர்களை பாராட்டுவோம்.

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? லூக்கா 6 : 41

……