தேவன் ஒரு மனிதனல்ல மனம் மாற.

Devotions

தேவன் ஒரு மனிதனல்ல மனம் மாற.

ஜாய்ஸ் மேயர் அமெரிக்காவில் பிரசித்தம் பெற்ற தேவ ஊழியர்.அவர்களின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வமாககூடுகிறார்கள். எங்கு போனாலும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கின்றது. ஆனால் பாருங்கள், அவர்களுடைய சிறு மற்றும் வாலிப பிராயயங்கள் சந்தோஷமானதாக இருக்கவில்லை. தன் சொந்த தந்தையாலேயே தவறாக பயன்படுத்தப்பட்டவர். வாழ்க்கையே இருண்டு போனது போல் அவர்கள் உணர்ந்த நாட்கள் அது. பலமுறை மரித்துபோய் விடலாமே என்று அவர்கள் நினைத்திருந்த நாட்கள் அது. காலங்கள் உருண்டோடின இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். பலமுறை வேதாகமத்தை வாசித்தார். அப்பொழுது ஒரு இரகசியத்தை கண்டுகொண்டார். வேதாகமத்தில் தேவன் பல பரிசுத்தவான்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் (வாக்குத்தத்தங்கள்) இன்று நமக்கும் பொருந்தும் என்று உணர்ந்து கொண்டார். அதிலிருந்து 100 வாக்குத்தத்தங்களை தெரிந்தெடுத்தார். ஒவ்வொரு நாளும் அந்த வாக்குத்தத்தங்களை மீண்டும் மீண்டும் விசுவாசத்துடன் அறிக்கையிட்டார். அது பலித்துவிட்டதாகவே நம்பினார். தேவன் அவரை கைவிடவில்லை இன்று அவர்கள் மிகப்பெரிய ஊழியராக இருக்கின்றார். பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக அவை இருக்கின்றன. இன்றும் கூட ஏதோ ஒரு பிரச்சனையோடு போராடிக்கொண்டிருக்கும் என் அன்பு நண்பா, தோழி ஏன் வருத்தப்படுகிறீர்கள்? ஏன் இந்த சஞ்சலம்? தேவனை பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குரிய வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொண்டு, அவற்றை தினமும் விசுவாசத்துடன் அறிக்கையிடுங்கள். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல. நிச்சயம் உங்களுக்கும் அதிசயம் செய்வார்.

பொய் சொல்ல தேவன் ஒரு மனிதனல்ல மனம் மாற அவர் ஒருமனுபுத்திரனல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ? எண் 23 : 19 ……